கூடலுார்:கூடலுாரில், தடைசெய்யப்பட்ட, 3.9 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, 7,800 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.கூடலுார், ஆர்.டி.ஓ., ராஜ்குமார் தலைமையில், தாசில்தார் தினேஷ்குமார், வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர்கள் பாலச்சந்திரன், சுனில் ஆகியோர், கூடலுார் நகரிலுள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து நேற்று ஆய்வு செய்தனர். ஆய்வில், தடைசெய்யப்பட்ட, 3.9 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, 7,800 ரூபாய் அபராதம் விதித்தனர். அதேபோன்று, முகக்கவசம் அணியாத இருவருக்கு தலா, 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.