குன்னுார்:மறைந்த கால்பந்து வீரர் மாரடோனா நினைவாக, 'ஆலோரை ஸ்போர்ட் ஸ்கிளப்' சார்பில் ஐவர் கால்பந்து போட்டி, உபதலை அரசு பள்ளி மைதானத்தில் நடத்தப்பட்டது.போட்டியை உபதலை ஊராட்சி துணை தலைவர் செந்தில் குமார் துவக்கி வைத்தார். உலிக்கல், ஸ்போர்ட்ஸ் கிளப், கேத்தி, 'ஷோவ் லேஷ்' அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. இறுதி போட்டியில், ஷோவ் லேஷ் அணி, 2-0 என்ற கோல் கணக்கில் உபதலை அணியை வென்றது. பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்ற அணிக்கு, உபதலை ஊராட்சி தலைவர் பாக்கியலட்சுமி கோப்பை வழங்கினார். இரண்டாம் இடம்பிடித்த உபதலை அணிக்கு தேசிய ஹாக்கி வீரர் சுரேஷ்குமார், முன்னாள் யூனியன் கவுன்சிலர் பாபு வழங்கினர். சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு, உறுப்பினர் பிந்து, சவுந்தர்ராஜ், ராஜா, சகாயநாதன் உட்பட பலர் பரிசுகள் வழங்கினர். அண்ணாதுரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.