கோவை:கோவையில் கொரோனா குணமடைந்த, 50 பேர், நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று, 14 பேருக்கு நோய்த் தொற்று உறுதியானது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 48 ஆயிரத்து, 572- ஆக உயர்ந்தது. நேற்று ஒரு முதியவர் இறந்தார். இதுவரை, 612 பேர் பலியாகியுள்ளனர்.அரசு, தனியார் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த, 50 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை, 47 ஆயிரத்து, 41 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 919 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கோவைக்கு இதுவரை, 1,770 விமானங்கள் வந்துள்ளன. இதில், ஒரு லட்சத்து, 70 ஆயிரத்து, 452 பேர் வந்துள்ளனர். இவர்களுக்கு பரிசோதனை செய்ததில், இதுவரை 354 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.