காட்டேரிக்குப்பம் : தேத்தாம்பாக்கம் சங்கராபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்திய மினி வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் ஏகாம்பரம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது, சுத்துக்கேணியில் இருந்து தேத்தாம்பாக்கம் வழியாக வேகமாக வந்த டி.என்.12 ஏசி 5475 பதிவெண் கொண்ட மினி வேனை தடுத்து நிறுத்தினர். போலீசாரை கண்டவுடன் வேனை ஓட்டி வந்தவர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடினர்.இதையடுத்து, மினிவேனை போலீசார் சோதனை செய்தபோது, சங்கராபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வருவது தெரியவந்தது.
தொடர்ந்து, மணல் கடத்திய மினி வேனை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து வழக்கு பதிந்து, தப்பி ஓடிய தேத்தாம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெரு சுரேஷ் 36, கைக்கிலப்பட்டு அசோக் ஆகியோரை தேடிவருகின்றனர்.