காரைக்கால் : நெடுங்காடு, குரும்பகரம் தட்டான் குளத்து வீதியை சேர்ந்த பீட்டர் மகன் சந்தியாகு,30; கூலி வேலை செய்து வருகிறார்.
அதேபகுதியை சேர்ந்தவர் ஆசைதம்பி. இருவருக்கும் இடப் பிரச்னையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் சந்தியாகு, ஆசைத்தம்பி மனைவி சத்தியாவை ஆபாசமாக திட்டி, இரும்பு கம்பியால் தாக்கினர்.இதுகுறித்து சத்தியா அளித்த புகாரின் பேரில் நெடுங்காடு போலீசார் வழக்கு பதிந்து, சந்தியாகுவை கைது செய்தனர்.