திருவாலங்காடு : ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில், 3.57 கோடி ரூபாயில் புதியதாக, சிமென்ட் சாலைகள் ஏற்படுத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருவாலங்காடு ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய கவுன்சிலர்களின் சாதாரண கூட்டம், ஒன்றிய சேர்மன் ஜீவா தலைமையில் நடந்தது.துணை சேர்மன் சுஜாதா முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் அருள் வரவேற்றார். கூட்டத்தில், வரவு - செலவு கணக்கு சரி பார்க்கப்பட்டது.அதை தொடர்ந்து, ஒன்றியத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில், 15வது மானியக் குழு திட்டத்தின் மூலம், 3 கோடியே, 57 லட்சத்து, 9 ஆயிரத்தி, 121 ரூபாய் மதிப்பில், புதிதாக சிமென்ட் சாலை அமைத்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர், ஒன்றிய பொறியாளர் சுந்தரம், வட்டார மருத்துவ அலுவலர் ஜெயஸ்ரீ உட்பட பலர் பங்கேற்றனர்.