வங்கி கடன் மோசடியில் 'கார் ரேஸ்' வீரர் 'பலே' கில்லாடிகளை காவலில் விசாரிக்க முடிவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2020
06:37

சென்னை : வங்கி கடன் மோசடி வழக்கில் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள, கார் பந்தய வீரர் உள்ளிட்ட மூவரையும், போலீஸ் காவலில் விசாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.



சென்னை, நீலாங்கரையைச் சேர்ந்தவர்கள், முகமது முசாமில், 34, அய்யாதுரை, 32, கோடம்பாக்கம், டிரஸ்ட்புரத்தைச் சேர்ந்தவர், பாலவிஜய், 35.இவர்கள் மூவரும், வேளச்சேரி மற்றும் திருவான்மியூரில் உள்ள, 'பஞ்சாப் நேஷனல்' வங்கி, ஆழ்வார்பேட்டை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உட்பட, ஐந்து வங்கி கிளைகளில், போலி ஆவணங்களை தாக்கல் செய்து, 3.86 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.இவர்களை, மத்திய குற்றப்பிரிவு போலீசார், நவ., 27ல் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இவர்களிடம் இருந்து, 'பி.எம்.டயுள்யூ., ஆடி' என, இரண்டு கார்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.



மோசடிக்கு மூளையாக செயல்பட்ட பாலவிஜய், கார் பந்தய வீரர் என்பது தெரியவந்தது.இவர், 2010 - 14, இந்திய அளவில் நடந்த கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ளார். 'மோட்டோ ரேவ்' என்ற கார் பந்தய அணியை உருவாக்கி, அதன் உரிமையாளராக இருந்தார்.பாலவிஜய் உள்ளிட்ட மூவரும், நீலாங்கரை, பனையூர், முட்டுக்காடு பகுதியில் உள்ள, சினிமா ஷூட்டிங் பங்களாக்களை வாடகைக்கு எடுப்பர்.அங்கு நண்பர்களின், 'ஆடி ' உள்ளிட்ட கார்களை நிறுத்தி, அது தங்களுடையது என, தொழில் அதிபர்கள் போல நடித்து, வங்கி அதிகாரிகளை நம்பச்செய்து, 3.86 கோடி ரூபாய்க்கு, கார் கடன் வாங்கி, மோசடி செய்தனர்.



வங்கி கடனில், ஆடி, பி.எம்.டபுள்யூ உள்ளிட்ட கார்களை வாங்கிய இவர்கள், சில வாரங்களுக்கு பின் காரில் குறைகள் இருப்பதாக, டீலர்களிடமே கொடுத்து விடுவர். கார் வாங்க கொடுத்த பணம், பாலவிஜய் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும்.இவ்வாறு, மோசடி செய்த ரூபாயில், 80 சதவீதத்தை பாலவிஜய் எடுத்துக்கொள்வார். மீதமுள்ள, 20 சதவீத ரூபாயை, கூட்டாளிகள் மற்றும் கார் கடன் பெற உதவிய இடைத்தரகர்களுக்கு கொடுத்து விடுவார் என, தெரிய வந்தது.இவர்கள், சென்னையில் மேலும் பல்வேறு வங்கிகளில், கார் கடன் வாங்கி மோசடி செய்தது தெரிய வந்தது. இதனால் இவர்களை காவலில் விசாரிக்க, மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X