கழிவு நீர் பிரச்னைக்கு விமோசனம் கிடைக்குமா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2020
06:39

சென்னை : சென்னையில், 'கழிவுநீர் பிரச்னையில் இருந்து, எப்போது விமோசனம் கிடைக்கும்' என, குடியிருப்புவாசிகள் புலம்புகின்றனர்.



நோய் தொற்று பரவும் முன் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.விருகம்பாக்கம்விருகம்பாக்கம், சாலிகிராமம், ஆற்காடு சாலையில், 120 வீடுகளுடனான, அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.இங்கிருந்து வெளியேறும் கழிவு நீர், ஆற்காடு சாலையில் உள்ள பாதாள சாக்கடைக்கு செல்கிறது. பாதாள சாக்கடைக்கு, கழிவு நீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.இதனால், இக்குடியிருப்பின் கீழ் தளத்தில், இரண்டு ஆண்டுகளாக அடிக்கடி கழிவு நீர் தேங்கி வருகிறது.இது குறித்து, குடிநீர் வாரியம் மற்றும் மாநகராட்சியிடம் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் சார்பில், பல முறை புகார் அளிக்கப்பட்டது.



ஆனால், தற்காலிக தீர்வை தவிர, நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. இதனால், நோய் தொற்று ஏற்படுகிறது.குடிநீர் வாரிய அதிகாரிகள், இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.வேளச்சேரிஅடையாறு மண்டலம், 178வது வார்டு, வேளச்சேரி, எம்.ஜி.ஆர்.நகரில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள, இரண்டாவது பிரதான சாலை மற்றும் 10வது தெருவில், கடந்த சில நாட்களாக, கழிவு நீர் தேங்கி நிற்கிறது. குடிநீரிலும், கழிவு நீர் கலந்துள்ளது.இதனால், தொற்று நோய் பரவும் அச்சம் பகுதி மக்களிடம் ஏற்பட்டுள்ளது. கழிவு நீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.



இது குறித்து, பகுதிமக்கள் கூறியதாவது:'நிவர்' புயலுக்கு முன்பே கழிவு நீர் அடைப்பு பிரச்னை உள்ளது. தெருக்களில் தேங்கி நிற்கும் கழிவு நீரால், துர்நாற்றம் வீசி, துாங்க முடியவில்லை. சுவாச பிரச்னை ஏற்படுகிறது.குடிநீரில் கலந்ததால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. தெருக்களில், நடக்கவும் முடியவில்லை. பிரச்னையை, குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கூறினால், உடனே நடவடிக்கை எடுப்பதில்லை. முறையான பதிலும் கூறுவதில்லை. பல முறை புகார் தெரிவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம். உயர்அதிகாரிகள் தலையிட்டு, கழிவு நீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.



புழல்மாதவரம் மண்டலம், 26வது வார்டு, புழல் விநாயகபுரம், காஞ்சி நகர் முழுக்க பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆங்காங்கே பாதாள சாக்கடை மூடிகள் வழியாக, கழிவு நீர் சாலைகளில் பொங்கி வழிந்து, சாலைகளில் தேங்குகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அம்பத்துார்அம்பத்துார் மண்டலம், 82வது வார்டு, கள்ளிக்குப்பம் அருகே, மேற்கு பாலாஜி நகர், தென்றல் நகர், சக்தி நகர் ஆகிய பகுதிகளிலும், பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வெளியேறும் கழிவு நீர், சாலையில் தேங்கி, சுகாதார சீர்கேடு நிலவுகிறது.சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்படும் மக்கள், இது குறித்து, அம்பத்துார் மற்றும் மாதவரம் மண்டலத்தின், குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தும், இதுவரை நடவடிக்கை இல்லை.



மழை பெய்தால், நிலைமை மேலும் மோசமாகி, வீடுகளுக்குள் கழிவுநீர் பாய்கிறது. இந்த பிரச்னைக்கு, குடிநீர் வாரிய அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து, பாதாள சாக்கடை அடைப்பை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து, மாதவரம் மக்கள் கூறியதாவது:குடிநீர் மற்றும் கழிவு நீர் கால்வாய் இணைப்புக்குரிய, அனைத்து வகையான வரியையும், மாநகராட்சி நிர்வாகம், நிலுவையின்றி வசூலித்து வருகிறது. ஆனால், சுகாதார சீர்கேட்டை உருவாக்கும், பாதாள சாக்கடை அடைப்பு மற்றும் கழிவுநீர் தேங்கும் பிரச்னையை கண்டு கொள்வதில்லை.கழிவு நீரின் வேகத்தை கட்டுப்படுத்த, பாதாள சாக்கடை மூடியின் மீது, பெரிய கல் வைத்துள்ளோம். குடிநீர் வாரிய அதிகாரிகள், பாதாள சாக்கடை அடைப்பை உடனே நீக்கி, சீரமைக்க வேண்டும் என்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X