சென்னை : வீடுகளில் பூட்டை உடைத்து, நகை திருடிய நபருக்கு, ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
வேளச்சேரி, விஜயநகர், மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 40. கடந்த, 2017 டிசம்பரில், இவரது வீட்டின் பூட்டை உடைத்து, 13 சவரன் நகை திருடப்பட்டது.அதேபோல், 2018 ஏப்ரலில், அதே தெருவைச் சேர்ந்த, கருணாகரன், 45, என்பரவது வீட்டின் பூட்டை உடைத்து, 12 சவரன் நகை திருடப்பட்டது.வேளச்சேரி போலீசாரின் விசாரணையில், திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது, சேலையூர், காந்தி நகரைச் சேர்ந்த கண்ணன், 37, என தெரிந்தது. போலீசார், அவரை கைது செய்தனர்.இவ்வழக்கு, சைதாப்பேட்டை, 18வது நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசுதாகர், கண்ணனுக்கு, ஆறு மாத சிறை தண்டனை மற்றும் 3,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.