சென்னை : தாலுகா அலுவலகங்களில் நடந்த, சிறப்பு முகாம்களில், 33 பேருக்கு, 70 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகமான, 'டாம்கோ' சார்பில், தனிநபர், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறு கடன், கல்விக்கடன் உட்பட, பல்வேறு திட்டங்களுக்கு, நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி, 2019- - 20ம் ஆண்டில், 36.85 கோடி ரூபாயில் கடன் வழங்கப்பட உள்ளது.இதற்கான சிறப்பு கடன் வழங்கும் முகாம்கள், சென்னையில் உள்ள, 16 தாசில்தார் அலுவலகங்களில், கடந்த ஒரு மாதம் முழுதும் நடந்தன.
இதில், தண்டையார்பேட்டை தாலுகாவில், 12 பேரும், திருவொற்றியூர் தாலுகாவில், ஐந்து பேர் உட்பட, பல்வேறு தாலுகாக்களில் மொத்தம், 33 பேர் கடனுக்காக விண்ணப்பித்தனர்.அவர்களின் விண்ணப்பங்கள் அடிப்படையில், மொத்தம், 70 லட்சம் ரூபாய் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என, மாவட்ட அதிகாரிகள் தகவல்தெரிவித்தனர்.