திருப்போரூர் : தாழம்பூரில், அடிப்படை வசதியின்றி, மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கேளம்பாக்கம் அடுத்த, தாழம்பூர், ஜெய்பீம் நகர், சர்ச் தெருவில், 500 குடும்பங்கள் உள்ளன. இத்தெருவில் கால்வாய் வசதி இல்லை. 300 மீட்டர் சாலை வசதியும் இல்லை. எனினும், இத்தெரு வழியாக தான், மக்கள், தாழம்பூர் - -நாவலுார் பிரதான சாலைக்கு செல்கின்றனர். சமீபத்தில் பெய்த கனமழையால், இந்த தெருவில், தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால், குழந்தைகள் முதல் பெரியோர் வரை கடும் அவதியடைகின்றனர்.எனவே, மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி நிர்வாகம் மழை நீரை அகற்றி, புதிய சாலை, கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.