சேலம்: கூட்டுறவில், மூன்று துணைப்பதிவாளர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர். சேலம், கூட்டுறவு நகர வங்கி துணைப்பதிவாளர் கர்ணன், நாமக்கல் சரகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணிபுரிந்த ரவிச்சந்திரன், நாமக்கல், வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்துக்கும், பழநி கூட்டுறவு நகர வங்கியில் பணிபுரிந்த திருப்பதி, சென்னை, தலைமை மீன்வள கூட்டுறவு சங்கத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, அரசு கூடுதல் தலைமை செயலர் தயானந்த் கட்டாரியா பிறப்பித்துள்ளார்.