சேலம்: மாவட்டத்தில், புதிதாக, 78 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சேலம் அரசு மருத்துவமனை, கொரோனா வார்டில் சிகிச்சை பெறுவோரில், ஆறு பெண்கள், ஏழு ஆண்கள் குணமாகி, நேற்று, வீடு திரும்பினர். புதிதாக, சேலத்தில் ஒரேநாளில், 78 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, சேலம் மாநகராட்சியில், 42 பேர், ஓமலூர், 6, மகுடஞ்சாவடி, காடையாம்பட்டி, தலா, 5, நங்கவள்ளி, 4, பெத்தநாயக்கன்பாளையம், மேட்டூர் நகராட்சி, ஆத்தூர் நகராட்சி, நரசிங்கபுரம் நகராட்சி, தலா, 2 பேர், இடைப்பாடி, மேச்சேரி, சங்ககிரி, வீரபாண்டி, ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம், கெங்கவல்லி, இடைப்பாடி நகராட்சி, தலா ஒருவர் வீதம், மாவட்டத்தில், 78 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து, இதுவரை, சேலத்தில் பாதிக்கப்பட்டோர், 29 ஆயிரத்து, 796 பேர். அதில், இறந்தவர், 439 பேர் அடங்கும்.