மேட்டூர்: மேட்டூர், தூக்கனாம்பட்டியை சேர்ந்தவர் செங்கோடன், 72. இவர், நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு, மேட்டூர் மேற்கு பிரதான சாலையிலுள்ள சின்னபார்க் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, காவேரிகிராஸ் அடுத்த, கூராண்டிபுதூரை சேர்ந்த முத்துவேல், 25, ஓட்டிவந்த, 'டிஸ்கவர்' பைக், செங்கோடன் மீது மோதியது. அதில், அவர் உயிரிழந்தார். மேட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.