சேலம்: கல்லூரி மாணவரை நாய் கடித்து குதறியதால், வேடிக்கை பார்த்த உரிமையாளரை, போலீசார் கைது செய்தனர்.
சேலம், சின்னதிருப்பதியை சேர்ந்த, அசோக்குமார் மகன் விக்னேஷ், 17; அரசு கலை கல்லூரியில், பி.பி.ஏ., முதலாமாண்டு படிக்கிறார். நேற்று காலை, தன் வீடு அருகே சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பிரபு, 38, வளர்க்கும் நாய், விக்னே?ஷ துரத்தி கடித்துக்குதறியது. இதை, வாசலில் நின்றிருந்த பிரபு தடுக்காததோடு, கிண்டல் செய்துள்ளார். பல இடங்களில் காயம் ஏற்பட்டு கதறிய விக்னே?ஷ உறவினர்கள் மீட்டு, சேலம் அரசு மருதத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, 52 ஊசிகள் போடப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் புகார்படி, கன்னங்குறிச்சி போலீசார், பிரபுவிடம் விசாரித்தனர். அப்போது, அவர் அடாவடியாக பேச, போலீசார் கைது செய்தனர்.