சங்ககிரி: சங்ககிரி, தேவூர் அருகே, சோளக்கவுண்டனூரை சேர்ந்த, முனியப்பன் மகன் விஜய், 30. கட்டடத்தொழிலாளியாக பணிபுரிந்தார். புள்ளாக்கவுண்டம்பட்டி அக்ரஹாரம், புளியம்பட்டி மேல்வளவை சேர்ந்தவர் நேஷனா, 25. இவரை, ஆறு ஆண்டுக்கு முன், காதலித்து திருமணம் செய்து கொண்ட விஜய், மாமியார் வீட்டிலேயே வசித்து வந்தார். நேற்று காலை, 7:00 மணிக்கு, அங்குள்ள கரடு அருகே, விஜய் இறந்து கிடந்துள்ளார். அந்த வழியாக சென்றவர் கொடுத்த தகவல்படி, நேஷனா சென்று பார்த்தார். தொடர்ந்து, அவர், தேவூர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரில், 'கணவரின் இறப்பு குறித்து விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக்கூறியிருந்தார். உடலை கைப்பற்றி, போலீசார் விசாரிக்கின்றனர்.