வீரபாண்டி: சாலையோர மின்கம்பத்தை சுற்றியுள்ள செடி, கொடியால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. வீரபாண்டி, பாலம்பட்டி - பூலாவரி பிரதான சாலை, லட்சுமனூர் முருகன் கோவில் அருகே, மின்கம்பம் உள்ளது. அதை சுற்றி வளர்ந்துள்ள செடி, கொடிகள், கம்பத்தை படர்ந்து, உச்சி வரை சென்று, மின் கம்பிகளில் தொங்கிக்கொண்டிருக்கிறது. தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால், கொடிகளில் மின்சாரம் பாய்ந்து, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மின்வாரிய அதிகாரிகள், கம்பத்தை சுற்றி வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும்.