ஓசூர்: தளி அடுத்த மதகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் பெத்தேராஜ், 44. விவசாயி; இவர், நேற்று முன்தினம் மாலை, அப்பகுதியில் உள்ள மதலைமுத்து என்பவரது விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில், தன் மாடுகளை கழுவி கொண்டிருந்தார். அப்போது, வலிப்பு ஏற்பட்டு, கிணற்றுக்குள் தவறி விழுந்த அவர், நீரில் மூழ்கி பலியானார். தளி போலீசார் சடலத்தை மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.