கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, வெங்கடா புரத்தை சேர்ந்தவர் கமலக்கண் ணன், 55. இவரது, ஒரு காலில் ? செய்த அறுவை சிகிச்சையால், நடக்க முடியாமல் தவழ்ந்து சென்று கொண்டிருந்தார். இவரை கவனிக்க யாரும் முன் வராத தால், கடந்த மூன்று மாதங்களாக, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண் டில், பிச்சை எடுத்து வந்தார். நேற்று காலை, 5:30 மணிக்கு பஸ் ஸ்டாண்டின் நுழைவு வாயிலில், தவழ்ந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, வளைவில் வந்த, அடையாளம் தெரியாத அரசு பஸ் ஒன்று, அவர் மீது ஏறியது. இதில், கமலக்கண்ணன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து, கிருஷ்ணகிரி, டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்கு பதிவாகிய, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகிய வீடியோ காட்சிகளை பார்த்து விசாரித்து வருகின்றனர்.