மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம், 100.55 அடியாக அதிகரித்தது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. டெல்டா மாவட்டங்களில், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால், கடந்த வாரம் அணையில் இருந்து, டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டது. குடிநீருக்கு மட்டும் காவிரியில், 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்பிடிப்பு பகுதியில், மழை தீவிரம் குறைந்ததால், நேற்று முன்தினம் வினாடிக்கு, 7,013 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர் வரத்து, நேற்று, 6,976 கனஅடியாக குறைந்தது. எனினும், வரத்தை விட திறப்பு குறைவாக இருந்ததால், நேற்று முன்தினம், 100.18 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று, 100.55 அடியாக சற்று அதிகரித்தது.