நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பிரேமா வெளியிட்டுள்ள அறிக்கை: நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில், வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், தங்கள் வயலில் ஏற்படும் அடிஅழுகல் நோயை கட்டுப்படுத்த, நல்ல வடிகால் வசதி செய்ய வேண்டும். ஒரு கிலோ விதை வெங்காயத்திற்கு, 10 கிராம் சூடோமோனாஸ் அல்லது 4 கிராம் ட்ரைகோகெர்மா விரிடி கலந்து, 24 மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும். கடைசி உழவு செய்யும் போது, ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் சூடோமோனாஸ் மற்றும் டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் 5 கிலோ வேம்பு உயிர் பூஞ்சான் கொல்லிகளை, 100 கிலோ தொழு எருவுடன் கலந்து இட வேண்டும். அல்லது விதைக்கும் போது இடலாம். விதைத்து, 15 நாட்கள் கழித்து, சூடோமோனாஸ் 5 கிராம், ஒரு லிட்டர் தண்ணீர் என்ற வீதத்தில் கலந்து, கைத்தெளிப்பான் அல்லது பேட்டரியால் இயங்கும் தெளிப்பான் மூலம் பயிரின் கீழ் பகுதி நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும். நடவு செய்த, 30 நாளில் அல்லது அடி அழுகல் நோய் பாதிப்பு தென்படும்போது, டெபுகொனசோல், 50 சதவீதம், டிரைப்ளாக்ஸின் புரேரின், 25 சதவீதம், அஜாக்ஸஸ்புரோபின், 23 சதவீதம், எஸ்சி 1 மில்லி/லிட்டர் மெட்டிராம் + பைராக்லோஸ்ரோபின் 60 சதவீதம் டபிள்யூ ஜி 2 கிராம் / லிட்டர் தெளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.