குமாரபாளையம்: குமாரபாளையத்தில், ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணமானவர் தற்கொலை செய்து கொண்டார். குமாரபாளையம் அருகே, பூலக்காட்டில் வசித்தவர் கோகுல்நாத், 31. கூலித்தொழிலாளி. இவருக்கும், கீதா, 24, என்பவருக்கும், ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவருக்கும் அடிக்கடி, கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கரூரில் உள்ள தன் பெற்றோர் வீட்டிற்கு கீதா சென்று விட்டார். பலமுறை அழைத்தும் வராததால், கோகுல்நாத் நேற்று அதிகாலை தனது வீட்டில், பேனில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.