நாமக்கல்: கார் கண்ணாடி உடைத்து, ரூ.70 ஆயிரம் திருடப்பட்டுள்ளது. கரூர், பாண்டியன் நகரை சேர்ந்தவர் கனகராஜ், 38. இவர், நாமக்கல்-சேலம் சாலையில், பேட்டா ஷூ ?ஷாரூம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, தனது 'ஐ10' காரில் சென்ற கனகராஜ், கடை அருகில் நிறுத்திவிட்டு, கடைக்கு சென்று வியாபாரத்தை தொடர்ந்துள்ளார். இரவு, 9:50 மணிக்கு வியாபாரத்தை முடித்துக் கொண்டு வீட்டுக்கு செல்வதற்கு வந்துள்ளார். அப்போது, காரின் இடது பக்க கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். உள்ளே பார்த்தபோது, காருக்குள் துணி வைக்கப்பட்டிருந்த கட்டைப்பையும், அதற்குள் இருந்த, 70 ஆயிரம் ரூபாயும் திருடப்பட்டிருப்பது தெரிந்தது. இது குறித்து, சம்பவ இடத்துக்கு வந்து, நாமக்கல் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.