வெண்ணந்தூர்: சாலை நடுவே தொங்கும் ஆலம் விழுதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சேலம் மாவட்டம் மல்லூரில் இருந்து, நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூருக்கு செல்ல அனந்த கவுண்டம்பாளையம் வழியாக தார்ச்சாலை உள்ளது. இவ்வழியாகத்தான், டவுன் பஸ்கள் உள்பட கல்லூரி, பள்ளி வாகனங்கள் செல்கின்றன. இதில், அண்ணமலைப்பட்டி ஆலமரம் பஸ் ஸ்டாப்பில், பெரிய ஆலமரம் உள்ளது. இதில் தொங்கும் விழுதுகள், வாகனங்களை உரசி செல்லும் அளவுக்கு மிகவும் தாழ்வாக உள்ளது. சரக்கு லாரிகள் செல்லும் போது, கவனத்துடன் செல்ல வேண்டியுள்ளது. இல்லை என்றால், மேலே உள்ள மூட்டைகள், விழுதுகளில் மோதி கீழே விழுந்துவிடும அபாயம் உள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆலம் விழுதுகளை அகற்ற வேண்டும்.