கரூர்: ஹிந்து வேத மறுமலர்ச்சி இயக்கம் சார்பில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலை சுற்றி, அருள் ஊர்வலம் நேற்று நடந் தது. அதில், தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், குடமுழுக்கு மற்றும் பூஜைகளை தமிழில் நடத்தப்பட வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், மக்களுக்கு தமிழர்களின் மெய்யான ஹிந்து மதம் குறித்த, விளக்க துண்டு பிரசுரங்களை சிவனாடியார்கள் வழங்கினர். ஊர்வலத்தில், 50க்கும் மேற்பட்ட சிவனாடியார்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.