கரூர் வட்டாரத்தில் தொடர் மழை: மாயனூர், ஆத்துப்பாளையம் அணைக்கு நீர்வரத்து
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2020
12:52

கரூர்: கரூர் வட்டார பகுதிகளில், நேற்று காலை மழை பெய்தது. குளிர்ந்த காற்று வீசியதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


வங்க கடலில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், தமிழத்தில் தென் மாவட்டங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை, 11:00 மணிக்கு கரூர் டவுன், பசுபதிபாளையம், புலியூர், காந்தி கிராமம், தான்தோன்றிமலை, சோமூர், வெங்கமேடு, திருமாநிலையூர், செல்லாண் டிப்பாளையம், சுக்காலியூர் உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி வரை மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரத்தில் மட்டும், 4 மி.மீ., மழை பதிவானது.


* மாயனூர் கதவணைக்கு நேற்று முன்தினம் காலை, 2,525 கன அடி தண்ணீர் வந்தது. இந்நிலையில், மழை காரணமாக நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து, 7,560 கன அடியாக அதிகரித்தது. இதனால், காவிரியாற்றில், 7,060 கன அடியும், மூன்று கிளை வாய்க்காலில், 500 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.


* அமராவதி அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 338 கன அடி தண்ணீர் வந்தது. மழை காரணமாக, நேற்று முன்தினம் அமராவதி ஆறு மற்றும் புதிய வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 76.71 அடியாக இருந்தது.


* கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 48 கன அடி தண்ணீர் வந்தது. மழை காரணமாக நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணைக்கு, வினாடிக்கு, 183 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட, அணை நீர்மட்டம், 21.63 அடியாக இருந்தது.


 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X