கரூர்: கரூரில் நேற்று, 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால், குணமடைந்து வீடு திரும்பவர்களில் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மாவட்டத்தில், 15 பேருக்கு நேற்று, தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கரூர் அரசு மருத்துவமனை மற்றும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டு உள்ளனர். தொற்றில் இருந்து குணமடைந்த, 46 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை, மாவட்டத்தில் மொத்தம், 4,801 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 4,565 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 47 பேர் தொற்றால் இறந்து உள்ளனர். தற்போது, 189 பேர் மட்டுமே தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.