கரூர்: தான்தோன்றிமலை அருகே, கணவரை காணவில்லை என, மனைவி போலீசில் புகார் செய்துள்ளார். தான்தோன்றிமலை விக்னேஷ்வரா நகரை சேர்ந்தவர் ஹரிஹரன், 43; கட்டட தொழிலாளி. இவருக்கும், நாகதேவி, 34; என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்து, 14 ஆண்டுகள் ஆகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த, 23ல், வீட்டை விட்டு வெளியே சென்ற ஹரிஹரன், வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்களின் வீடுகளுக்கும் ஹரிஹரன் செல்லவில்லை. இதுகுறித்து, மனைவி நாகதேவி போலீசில் புகாரளித்தார். தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.