கரூர்: குவிந்துள்ள குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கரூர் அருகே மருத்துவ நகர் பகுதியில், ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். கடந்த சில நாட்களாக அதிகளவில் குப்பை தேங்கியுள்ளது. இதை அகற்றாததால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மழை பெய்து வருவதால், கடும் துர்நாற்றமும் வீசுகிறது. கொசுத் தொல்லை அதிகரித்து மக்களை துன்புறுத்துவதோடு, தொற்று நோய் பரவும் வாய்ப்பும் உள்ளது. எனவே, அவற்றை நாள்தோறும் அகற்றி, தூய்மைப் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.