கரூர்: கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை, செம்மடை பகுதியில், பயணிகள் வசதிக்காக நிழற்கூடம் அமைக்கப்பட்டது. தற்போது, அங்கிருந்த இருக்கைகள் உடைந்த நிலையில் உள்ளன, சில இருக்கைகள் திருடு போய் விட்டன. இதனால், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் உட்கார முடியாமல் தவிக்கின்றனர். குறிப்பாக முதியோர், கர்ப்பிணிகள் சிரமப்படுகின்றனர். பயணிகள் நிழற்கூடத்தில், புதிதாக இருக்கைகளை அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இதேபோல், சுற்றுவட்டாரத்தில் உள்ள நிழற்கூடங்களையும் சீரமைக்க வேண்டும்.