திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெரியசெவலை கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் யாராவது இறந்தால் சுடுகாட்டிற்கு சடலத்தை எடுத்து செல்வதில் மின் கம்பியால் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.கடந்த சில மாதங்களாக சுடுகாட்டு பாதை குறுக்கே செல்லக்கூடிய மின்கம்பி மிக தாழ்வான உள்ளதால் பிரேதத்தை தோலில் எடுத்துச் செல்ல முடியாமல் அருகிலுள்ள விளை நிலத்தில் இறங்கி எடுத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பிரேதத்தை எடுத்துச் செல்லும் கிராம மக்கள் மிகவும் அவதியடைவதோடு கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.இதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்திய கம்யூ., கட்சி சார்பில் கடலுார் - சித்துார் பிரதான சாலையில் பிரேதத்தை வைத்து சாலை மறியல் செய்யப்போவதாக தெரிவித்துள்ளனர். எனவே அப்பகுதி மக்கள் நலன் கருதி அதிகாரிகள் உடனடியாக துரித நடிக்கை எடுக்க வேண்டும்.