ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துார் பகுதியை சேர்ந்த மூதாட்டி வேதநாயகம் 65, இவர் சில வாரங்களுக்கு முன்பு வீட்டு படியில் தவறி விழுந்து காயமடைந்ததாக கூறி சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி மூதாட்டி பலியானார்.ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் விசாரணையில் தேவகோட்டை பாவாசி பகுதியை சேர்ந்த உறவினரான விக்டர் 28, மூதாட்டியை படியில் இருந்து தள்ளி விட்டது தெரியவந்தது.போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து வாலிபர் விக்டரை கைது செய்தனர்.