பேரூர்:பொரியல் தட்டை விலை, 80 ரூபாயில் இருந்து, 15 ரூபாயாக சரிந்ததால், மானாவாரி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.தொண்டாமுத்துார் வட்டாரம் மானாவாரி விளைநிலங்களில், 60 நாளில் பயன் தரும் பொரியல் தட்டை பயிறு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு அறுவடையாகும் பொரியல் தட்டை கேரளாவுக்கு அதிகளவில் கொண்டு செல்லப்படுகிறது.ஓணம் மற்றும் தீபாவளி சமயத்தில், கிலோ, ரூ. 80க்கு விற்பனையானது. இந்நிலையில், சமீப நாட்களாக விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. கடந்த வாரத்தில், ஒரு கிலோ, 30 - 40 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று மதியம், பூலுவப்பட்டி காய்கறி மார்க்கெட்டில், கிலோ, 15 - 20 ரூபாய்க்கு விற்பனையானது. வரத்து அதிகரித்துள்ளதால், விலை வீழ்ச்சி அடைந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.அதே சமயம், கார்த்திகை மாத இறுதியில், அனைத்து காய்கறிகளின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.