தொற்று பரவல் இலக்கை அடைய லேட்டாகுதுங்க!ஒத்துழைப்பு கோருகிறார் கலெக்டர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

01 டிச
2020
09:18
பதிவு செய்த நாள்
டிச 01,2020 00:33

கோவையில் கொரோனா பரவல், தீபாவளிக்கு பின் அதிகரிக்கும் என எதிர்பார்த்த நிலையில், முழுமையான கண்காணிப்பால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.தற்போது தினசரி பாதிப்பு, 150க்குள் உள்ளது. இந்த எண்ணிக்கையை, 100க்குள் கொண்டு வரும் நோக்கில் தடுப்பு, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


இந்நிலையில், பொதுஇடங்கள், பொது நிகழ்வுகளில் தொடரும் விதிமீறல்களால், அதிகாரிகள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. பல இடங்களில் பொதுமக்கள் முககவசம் இன்றி நடமாடுவதும், சமூக இடைவெளி கடைப்பிடிக்காமலும் இருக்கின்றனர்.இதுகுறித்து, கலெக்டர் ராஜாமணி கூறியதாவது:அனைத்து துறைகள் வாயிலாகவும், கொரோனா குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்துவரும் இச்சூழலில், பொது இடங்களில் பலர் முககவசம் அணியாமல் வருகின்றனர். வாரச்சந்தை, இறைச்சி கடை, மீன் மார்க்கெட் போன்ற இடங்களில், சமூக இடைவெளி பின்பற்றுவதில்லை.துணிக்கடைகள், நகைக்கடைகள் மற்றும் மால்களிலும், இதே நிலை காணப்படுகிறது.


திருமண நிகழ்வுகளில் அரசு அனுமதித்த, 100 என்ற எண்ணிக்கையை காட்டிலும் அதிகமாக கூடுவதையும், விதிமுறை பின்பற்றாமல் இருப்பதையும் காணமுடிகிறது. அன்றாட தொற்று பரவலை, நுாறுக்குள் கொண்டு வர வேண்டுமென பாடுபடுகிறோம். சிலரின் அலட்சியம் காரணமாக, இந்த இலக்கை அடைவது தாமதமாகிறது. திருமணம் உள்ளிட்ட பிற நிகழ்வுகளுக்கு, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக நபர் கூடினாலும், விதிமுறை கடைப்பிடிக்காவிட்டாலும், திருமண மண்டபம் மூடி 'சீல்' வைக்கப்படும். வணிக நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.


விதிமுறைகள் கண்காணிக்கப்படுகிறதா என்பதை வருவாய்த்துறை, ஊராட்சி, மாநகராட்சி, போலீசார் அனைவரும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஆகவே, பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-டிச-202011:44:38 IST Report Abuse
ஆப்பு கட்டுக்குள் வந்தால் இவிங்களுக்குப் பாராட்டு. கட்டுப்பலேன்னா மக்கள் ஒத்துழைப்பு குடுக்கலை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X