திண்டுக்கல் : திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் வழங்கும் விழா நடந்தது.வருவாய் அலுவலர் அன்புக்கரசன் வரவேற்றார். தலைவர் மருதராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் செல்வராஜ் கடனுதவி வழங்கினார்.மாவட்ட வளர்ச்சிக்குழு மேலாளர் பாலச்சந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ராமச்சந்திரன், பொது மேலாளர் ஆனந்தி பங்கேற்றனர். பயிர், பண்ணைக்கருவிகள், நிலம் மேம்பாடு கடன், சுயஉதவிக்குழு கடன் என 88 பேருக்கு ரூ.96.26 லட்சம் கடன் வழங்கப்பட்டது.