கன்னிவாடி : கன்னிவாடி, செம்பட்டி கிராமப்புற கோயில்களில் சொக்கப்பனை தீபமேற்றி கார்த்திகை தீப வழிபாடு நடந்தது.
கன்னிவாடி அருகே தோணிமலை முருகன் கோயிலில் பாலாபிேஷகத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. விசேஷ ஆராதனைகளுக்குப்பின் சொக்கப்பனை தீபமேற்றுதல் நடந்தது.தருமத்துப்பட்டி, செம்பட்டி, சித்தையன்கோட்டை, சின்னாளபட்டி கிராம கோயில்களில் விசேஷ பூஜைகளுக்குப்பின் சொக்கப்பனை தீபமேற்றுதல் நடந்தது. ஆன்மிக சொற்பொழிவு, கூட்டு வழிபாடுகள் நடந்தது. ஏராளமானோர் வீடுகளை தீபங்களால் அலங்கரித்திருந்தனர். சில இடங்களில், பட்டாசு வெடித்து கொண்டாடினர்.