ஸ்ரீவில்லிபுத்துார் : திண்டுக்கல் மாவட்டம் பழநியை சேர்ந்த ஸ்ரீவில்லிபுத்துார் பருத்தி ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் அறிவுடைநம்பி 46, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவி.,ராஜீவ்காந்தி நகரில் தற்போது குடும்பத்துடன் வசித்து வரும் அவர் மனஅழுத்த நோயிற்கு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அலுவலகம் வந்த அறிவுடைநம்பி காலை 10:30 மணிக்கு வாந்தி எடுத்தார். விஷம் குடித்தது தெரிய வர ஸ்ரீவி., அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இறந்தார். இவருக்கு மனைவி கலாராணி 44, சுவேதா ஸ்ரீ என்ற 7 வயது மகளும் உள்ளனர். டவுன் போலீசார் விசாரித்தனர்.