குஜிலியம்பாறை : டி.கூடலுார் அருகே கணவருவன் டூவீலரில் சென்ற பெண்ணிடம், மர்ம நபர்கள்தாலியை பறித்து சென்றனர்.
வடமதுரை செக்கனத்தை சேர்ந்தவர் இளையராஜா 31. இவரதுமனைவி பரமேஸ்வரி 28. தம்பதியர் இருவரும் ஆறு மாத ஆண் குழந்தையுடன், கரூரில் பரமேஸ்வரியின் தந்தையை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்றனர்.டி.கூடலுார் பூவாலம்மன் கோயில் அருகே மற்றொரு டூவீலரில்வந்த மர்ம நபர்கள், பரமேஸ்வரி கழுத்தில் கிடந்த அரை பவுன் தாலியைகயிறுடன் பறித்தனர்.
டூவீலர் ஓட்டிய தடுமாறியதால் வாகனத்துடன் மூவரும் ரோட்டில் விழுந்தனர். மூவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இரக்கமற்ற வழிப்பறி கொள்ளையர் தப்பினர். குஜிலியம்பாறை எஸ்.ஐ., செல்வராஜ் விசாரிக்கிறார்.