திண்டுக்கல் : திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள கக்கன் நகர் பகுதியில் 60 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்தனர். 35 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் -- கரூர் அகல ரயில் பாதை வருவதாக கூறி பொதுமக்களிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டது. மாற்றாக மாநகராட்சி பர்மா காலனி அருகே இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த இடத்திற்கு பட்டா வழங்கப்படவில்லை. பலமுறை கலெக்டர், வருவாய் துறை என பல இடங்களில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தங்களின் எதிர்பை பதிவு செய்யும் விதமாக அப்பகுதி மக்கள் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.