பொங்கலுார்:பொங்கலுாரில் பள்ளியிலுள்ள ஒரு அறைக்கு தீ வைத்த சம்பவத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.பொங்கலுார் பி.வி.கே.என்., மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், மூன்று அறைகள் உள்ளது. ஒரு அறையில் பழைய டி.சி., மற்றும் பேப்பர், விளையாட்டு சாமான்கள் வைக்கப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து, மூன்று அறைகளின் பூட்டை உடைத்தனர். பின், விளையாட்டு பொருட்கள் இருந்த அறைக்கு தீ வைத்து தப்பினர்.இதில், அறையில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலானது. அவிநாசி பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.