வால்பாறை:வால்பாறை அருகே, பன்னிமேடு எஸ்டேட் பங்களா டிவிஷன் பகுதியில், டிரைவராக பணிபுரிந்து வந்தவர் கென்னடி, 56. நேற்று காலை, 7:50 மணிக்கு, எஸ்டேட் டிராக்டர் டேங்கரில், தண்ணீர் நிரப்பிக் கொண்டு, 'ரிவர்ஸ்' வரும் போது, டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து, 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.இந்த சம்பவத்தில், டிராக்டரை ஓட்டி சென்ற கென்னடி கழுத்து மற்றும் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து, வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.