வால்பாறை:வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில், காசிவிஸ்வநாதர் சன்னதியில் நடந்த விழாவில், நேற்று மாலை, 5:30 மணிக்கு கணபதி ஹோமமும், 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், தொடர்ந்து சிறப்பு அலங்காரமும் நடந்தது. சிவலிங்க வடிவில் சங்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.சிறப்பு யாக பூஜைக்கு பின், இரவு, 7:00 மணிக்கு புனித நீரை பக்தர்கள் கைகளில் ஏந்தி, 'ஓம் நமச்சிவாயா' என்று திருநாமம் கூறியபடி கோவிலை வலம் வந்தனர். அதன் பின் பக்தர்கள் கொண்டு வந்த புனித நீரால், சிவனுக்கு அபிேஷக செய்யப்பட்டது.தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காசிவிஸ்வநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூன்றாவது வாரமாக நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள், சமூக இடைவெளி விட்டு சுவாமியை வழிபட்டனர்.