மேட்டுப்பாளையம்:சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு யாரும் வராத வகையில், தடுப்புகள் கட்டி வைக்கப்பட்டுள்ளன. ஸ்டேஷன் வளாகத்திற்கு முன் உள்ள காலியிடத்தில், சேர் டேபிள் போட்டு, பொது மக்களிடம், போலீசார் புகார் மனுக்களை பெறப்பட்டு வருகின்றனர். இலுப்பநத்தம் ஊராட்சி சார்பில், போலீஸ் ஸ்டேஷன் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.