கூடலுார்:பந்தலுார், கூடலுார், மகா கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.கூடலுார், நம்பாலகோட்டை சிவன்மலை கோவில் மகா கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, கோவில் கமிட்டி தலைவர் கேசவன் மகா தீபம் ஏற்றினார். பக்தர்கள் தீபத்தை வணங்கி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, வானவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.* பந்தலுார், பொன்னானி மாரியம்மன் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, இரவு தீபங்கள் ஏற்றபட்டு, கோவில் வளாகத்தில் தென்னை மட்டைகள் மூலம் அமைக்கப்பட்ட கோபுர வடிவிலான சுடலை பற்றவைக்கும் நிகழ்ச்சி நடந்தது.