கோத்தகிரி:கோத்தகிரி -கோடநாடு சாலையில், தனியார் எஸ்டேட்டில், 12 அடி உயர கிணற்றில், நேற்று முன்தினம் மாலை காட்டெருமை தவறி விழுந்துள்ளது. தண்ணீர் நிறைந்திருந்ததால், மேலே வர முடியாமல் காட்டெருமை தவித்துள்ளது. நேற்று காலை பணிக்கு சென்ற தொழிலாளர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கோத்தகிரி ரேஞ்சர் செல்வகுமார் தலைமையில், வனவர் சக்திவேல், வனக்காப்பாளர் வீரமணி சம்பவ இடத்திற்கு சென்று, தண்ணீரை வெளியேற்றி, கிணற்றில் மண் மூட்டைகளை அடுக்கி, காட்டெருமையை பத்திரமாக மீட்டு, வனப்பகுதிக்குள் விரட்டினர்.