குறிஞ்சிப்பாடி; குறிஞ்சிப்பாடியில் பள்ளி காவலாளி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.குறிஞ்சிப்பாடி, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம், 60; வேலவினாயகர்குப்பம் அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளியில் 20 ஆண்டுகளாக காவலாளியாக வேலை செய்தார். நேற்று காலை பள்ளியில் தங்கியிருந்த அறையில் ஆறுமுகம் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.