திட்டக்குடி; மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியை சேர்ந்த 16 பேரை போலீசார் கைது செய்தனர்.தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி தலைவர் பேரின்பம் தலைமையில் நிர்வாகிகள் பாண்டுரங்கன், முருகானந்தம், வீரராஜன், தமிழ்ச்செல்வன் மற்றும் வெலிங்டன் நீர்தேக்க பாசன சிறு,குறு விவசாயிகள் சங்க செயலாளர் பழனிச்சாமி உட்பட பலர் திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.திட்டக்குடி டி.எஸ்.பி., வெங்கடேசன் தலைமை யிலான போலீசார் போராட்டத்திற்கு அனுமதி இல்லை எனக்கூறி கலைந்து போக அறிவுறுத்தினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி தலைவர் பேரின்பம் உள்ளிட்ட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.