சிதம்பரம்; சிதம்பரத்தில் மாற்று பாதையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சிதம்பரம் - கடலுார் சாலையில் வண்டிகேட் அருகே பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நெடுஞ்சாலை துறையினர் மாற்று பாதை அமைக்காததால் பள்ளிப்படை ஊராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதி வழியாக வாகனங்கள் செல்கின்றன.சில தினங்களாக பெய்த மழையால் சாலைகள் முற்றிலும் பெயர்ந்து போனது. புகார் அளித்தும் சாலை சீரமைக்கவில்லை.இதை கண்டித்து நேற்று மாலை திருவரசு தலைமையில் அப்பகுதி மக்கள் 30க்கும் மேற்பட்டோர் பள்ளிப்படை மாற்று சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. நகர இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பேசி சாலை போடுவதாக கூறியதால் மறியல் கைவிடப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.