கடலுார்; தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.கடலுார் திருப்பாதிரிப்புலியூர் சப் இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.திருப்பாதிரிப்புலியூர், வெள்ளிமோட்டான் தெரு சந்திப்பில் தடை செய்த லாட்டரி சீட்டுகளை விற்ற கரையேறவிட்டகுப்பத்தைச் சேர்ந்த கார்த்திகேயனை, 48; போலீசார் கைது செய்தனர்.பாதிரிக்குப்பம் திடலில் லாட்டரி விற்ற கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்த பாஸ்கரனை, 43; கைது செய்தனர்.