நடுவீரப்பட்டு: திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவிலில் நேற்று ரோகினி தீபம் ஏற்றப்பட்டது.கார்த்திகை தீபத்தையொட்டி அனைத்து கோவில்களிலும் பரணி நட்சத்திரத்தில் தீபம் ஏற்றப்படும்.கடலுார் அடுத்த திருமாணிக்குழியில் அம்புசாஷி சமேத வாமனபுரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திற்கு மறுநாள் ரோகினி நட்சத்திரத்தில் தீபம் ஏற்றப்படுவது சிறப்பு. அதே போல் நேற்று ரோகினி தீபம் ஏற்றப்பட்டது. நேற்று காலை விநாயகர், அம்மன், வாமனபுரீஸ்வரர் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது.சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலை 6:00 மணிக்கு கோவிலின் எதிரில் உள்ள மலையில் ரோகினி தீபம் ஏற்றப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக சுவாமிகள் கோவில் உள் பிரகாரத்தில் உலாவாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.